AIMS OF ANMHSSOSA
|
குறிக்கோள்:
அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் படித்த மாணவர்களை ஒன்று சேர்த்து அவர்களின் அனுபவம், அறிவுத் திறமைகளைப் பகிர்ந்து பரிமாறிக் கொள்வது.
அனைத்து அங்கத்தினர்களும் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அபிராமம் அல்லது சென்னையில் கூடி கலந்துரையாடல் நடத்திப் பழைய மாணவர்களிடையே இணக்கத்தையும் நெருக்கத்தையும் ஏற்படுத்துவது.
அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் படித்து விட்டு பல துறைகளில், பல ஊர்களிலும், வெளி நாடுகளில் இருந்தாலும், அவரவர்கள் துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களையும், அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியின் மேம்பாட்டுக்கு உதவிகள் செய்த பழைய மாணவர்களையும் கவுரவிப்பது.
பத்தாம் வகுப்பிலும், பனிரெண்டாம் வகுப்பிலும் அரசாங்கத் தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்வு பெறும் மாணவ மாணவிகளைப் பாராட்டிக் கவுரவிப்பது
விலையாட்டு, கலை, அறிவியல் மற்றும் இலக்கியத்தில் தனித்திறமை பெற்று விளங்கும் படித்த / படிக்கின்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்குவிப்பது.
அங்கத்தினர் சேர்க்கை கட்டணமாக ரூபாய் 100/- ம், ஆண்டுச் சந்தாவாக ரூபாய் 1000/- ம் வசூலித்து பழைய மாணவர்களை அங்கத்தினராக்குவது.
நன்கொடைகள், அன்பளிப்பு இவைகளை யார் கொடுத்தாலும் ரசீது கொடுத்துப் பெற்றுக் கொண்டு சங்கத்தின் கணக்கு உள்ள வங்கியில் வைத்து நிதி நிலையைப் பலப்படுத்துவது
பொருளாதார வசதியற்ற அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் படித்த மாணவ மாணவிகளின் மேற்படிப்புக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் சார்ந்து உதவிகள் செய்வது, மேற்படிப்பிற்கான ஆலோசனைகள் மற்றும் தகுந்த பயிற்சிகள் பெற உதவுவது.
அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியின் மேம்பாட்டிற்கு அதன் நிர்வாக்ம் முறைப்படி சங்கத்தை அனுகினால் நிர்வாக குழு கூடி பரிசீலித்து தேவை மற்று அவசியத்தின் அடிப்படையில் நிதி நிலையைப் பொறுத்து உதவுவது.
அபிராமம் நத்தம் ஊர் மக்களின் ஆரோக்கியம் , உடல் நிலை பராமரித்தல் இவைகளுக்கு எதிர் காலத்தில் ஒரு அவசர முதலுதவி சுகாதார நிலையமோ அல்லது மருத்துவமனையோ நிர்வாக குழு கூடி பரிசீலித்து நிதி நிலையைப்பொறுத்து கட்டுவது / கட்ட உதவுவது.
Categories: None
Post a Comment
Oops!
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.