Welcome Speech by Mr K.P Shahul Hameed
|
16.11.2014 அன்று அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் தொடக்க விழா வரவேற்புரையில்
ஜனாப் ஹாஜி கே.பி. ஷாகுல் ஹமீது B.Sc., M.A., B.L
அவர்கள் நமது பள்ளியைப் பற்றி சொன்ன சில தித்திக்கும் தேன் துளிகள் :-
நாம் படித்த பள்ளி…
நாம் நடந்து வந்த நந்தவனம் !
ஓடித்திரிந்த வானவில் நிறைந்த
பால் வெளி !!
நம் எதிர்காலக் கனவைத்
துளிர்க்கச் செய்த
காலை வெயில் !
நேர்மையையும் நாணயத்தையும்
பதியன் போட்ட
உழவுக் கூடம் !
பல துரோணாச்சாரிகளைக் கொண்டு
உலா வந்த
உழவுப் பட்டறை
கோடையில் மழை
மழையில் குடை
கொல்லையில் கொத்துப் பூ
ஆற்றங்கரை மரம்.
அரசமர நிழல்.
ஆயிரம் இளமைக்
கனவுகளை நம் இதயத்தில் விதைத்து
நெஞ்சைத் தடவிச் சென்ற
வசந்த காலத் தென்றல் !!
இன்னும் சொல்ல எத்தனையோ !!!
சொல்லுங்கள் நண்பர்களே……….
Categories: None
Post a Comment
Oops!
The words you entered did not match the given text. Please try again.
Oops!
Oops, you forgot something.