AGM on 16.08.2015
|
![]() |
Notice: Annual General Meeting-2015
Dear Members,
1. It is proposed to conduct Annual General Meeting (AGM) of our “Abiramam Natham Muslim Higher Secondary School Old Students Association” on Sunday August 16th 2015 around 10.00 A.M. at Hotel Indian Palace (Fifth Floor) Old No 68 (New No 96) Moore Street, Mannady, Chennai-600001.
2. All the members are requested to attend the meeting either in person or through proxy (Form for the same is attached)
3. Agenda for the AGM is attached along with this notice.
4. Copies of Balance Sheet and Income and Expenditure Account for the period between November 2014 to 31st March 2015 duly audited and certified by a Charted Accountant are also attached herewith.
5. It is once again requested for active participation of all members in Annual General Meeting.
For Abiramam Natham Muslim Higher
Secondary School Old Students Association
Secretary
Chennai
Date : 20.07.2015
AGENDA
Date: 16-08-2015 -10.00 A.M.
1. Prayer
2. Welcome Address -President
3. Annual Report -Secretary
4. Special Report -Advisor (Law)
5. Annual Account -Treasurer
6. Appointing new committee Members in the place of vacant post.
7. Discussion
8. Vote of thanks
9. Lunch
For Abiramam Natham Muslim Higher
Secondary School Old Students Association
Secretary
Meeting on 05-05-2015
|
![]() |
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது சங்கத்தின் சென்ற 07.04.2015 அன்று நடந்த மாதாந்திரக் கூட்டத்தில் முடிவு செய்தது போல் மாதாந்திர நிர்வாகக் குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வரும் 05.05.2015 அன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெறவுள்ளது என்பதை தெறியப் படுத்துகின்றோம்.
இடம்: Hotel Crystal Residency
51/22, Model School Road,
Thousand Lights, Anna Salai
Chennai,600006
சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
Meeting on 07-04-2015
|
![]() |
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது சங்கத்தின் சென்ற 03.03.2015 அன்று நடந்த மாதாந்திரக் கூட்டத்தில் முடிவு செய்தது போல் மாதாந்திர நிர்வாகக் குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வரும் 07.04.2015 அன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெறவுள்ளது என்பதை தெறியப் படுத்துகின்றோம்.
இடம்: Hotel Crystal Residency
51/22, Model School Road,
Thousand Lights, Anna Salai
Chennai,600006
சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
Meeting on 03.03.2015
|
![]() |
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது சங்கத்தின் சென்ற 03.02.2015 அன்று நடந்த மாதாந்திரக் கூட்டத்தில் முடிவு செய்தது போல் இம்மாத நிர்வாகக் குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வரும் 03.03.2015 அன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெறவுள்ளது என்பதை தெறியப் படுத்துகின்றோம்.
இடம்: Hotel Crystal Residency
51/22, Model School Road,
Thousand Lights, Anna Salai
Chennai,600006
சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
Meeting on 03.02.2015
|
![]() |
அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி
பழைய மாணவர்கள் சங்கம்
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது சங்கத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம் 03.02.2015 அன்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கீழ்கண்ட நபர்களை கவுரவ ஆலோசகர்களாக அறிவித்து ஏகமனதாக ஏற்கப்பட்டது
1 . ஜனாப் K.M. முஸ்தபா கமால்லுதீன் (பொது ஆலோசகர்.
2 . ஜனாப் S.S முஹம்மது ஜக்கரியா (பொது ஆலோசகர்.
3 . ஜனாப் M.P.M செய்யது சித்தீக் (பொது ஆலோசகர்.
4 . ஜனாப் P.M. சாகுல் ஹமீது (தணிக்கை ஆலோசகர்
5 . ஜனாப் K.P. சாகுல் ஹமீது (சட்ட ஆலோசகர்.
பதிவு செய்யப்பட்ட நமது சங்கத்தின் சட்ட திட்டங்கள் சட்ட ஆலோசகரால் வாசிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டது.
நமது சங்க விதிகளின் படி அங்கத்தினர்கள் ரூ 100/- நுழைவுக் கட்டணம் வசூல் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
மாதாந்திர வரவு செலவுகள் பொருளாலர் ஜனாப் V.M. முஹம்மது முஸ்தபா அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
நமது சங்கத்தின் பதிவு விபரங்களை முறைப்படி முஸ்லிம் மேல்நிலை பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவித்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
செயற்குழு கூட்டத்திற்கு உறுப்பினர்கள் விரும்பும் நபர்களை பார்வையாளர்களாக அழைத்து வரலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
குறிப்பு:
செயற்குழு கூட்டத்திற்கு மொத்தம் 14 நபர்கள் வந்திருந்தனர்
வி.அ. செய்யது அப்துல் ஹமீது -
செயலாளர்
தேதி - 06-02-2015
BANK ACCOUNT
|
![]() |
Assalamu Alaikkum
Pleased to inform you all members of ANMHSSOSA that we have opened bank account with
State Bank of India,
west velachery branch,
Velachery, Chennai-600042.
SB AC No. 34672591835
NAME : ABIRAMAM NATHAM MUSLIM HIGHER SECONDARY SCHOOL OLD STUDENTS ASSOCIATION,
BR.CODE 11733
IFSC CODE: SBIN0011733
Registration Process
|
![]() |
அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி
பழைய மாணவர்கள் சங்கம்
இன்று (23.12.2014) காலையில் நமது சங்கத்தை முறையாக அரசு பதிவுத்துறையில் பதிவு செய்வதற்கான ஆவணக்களை சைதாபேட்டையில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. பதிவு செய்த பின்னர் வங்கிக் கணக்கு தொடங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதை அங்கத்தினர்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
AIMS OF ANMHSSOSA
|
![]() |
குறிக்கோள்:
அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் படித்த மாணவர்களை ஒன்று சேர்த்து அவர்களின் அனுபவம், அறிவுத் திறமைகளைப் பகிர்ந்து பரிமாறிக் கொள்வது.
அனைத்து அங்கத்தினர்களும் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அபிராமம் அல்லது சென்னையில் கூடி கலந்துரையாடல் நடத்திப் பழைய மாணவர்களிடையே இணக்கத்தையும் நெருக்கத்தையும் ஏற்படுத்துவது.
அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் படித்து விட்டு பல துறைகளில், பல ஊர்களிலும், வெளி நாடுகளில் இருந்தாலும், அவரவர்கள் துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களையும், அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியின் மேம்பாட்டுக்கு உதவிகள் செய்த பழைய மாணவர்களையும் கவுரவிப்பது.
பத்தாம் வகுப்பிலும், பனிரெண்டாம் வகுப்பிலும் அரசாங்கத் தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்வு பெறும் மாணவ மாணவிகளைப் பாராட்டிக் கவுரவிப்பது
விலையாட்டு, கலை, அறிவியல் மற்றும் இலக்கியத்தில் தனித்திறமை பெற்று விளங்கும் படித்த / படிக்கின்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்குவிப்பது.
அங்கத்தினர் சேர்க்கை கட்டணமாக ரூபாய் 100/- ம், ஆண்டுச் சந்தாவாக ரூபாய் 1000/- ம் வசூலித்து பழைய மாணவர்களை அங்கத்தினராக்குவது.
நன்கொடைகள், அன்பளிப்பு இவைகளை யார் கொடுத்தாலும் ரசீது கொடுத்துப் பெற்றுக் கொண்டு சங்கத்தின் கணக்கு உள்ள வங்கியில் வைத்து நிதி நிலையைப் பலப்படுத்துவது
பொருளாதார வசதியற்ற அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் படித்த மாணவ மாணவிகளின் மேற்படிப்புக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் சார்ந்து உதவிகள் செய்வது, மேற்படிப்பிற்கான ஆலோசனைகள் மற்றும் தகுந்த பயிற்சிகள் பெற உதவுவது.
அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியின் மேம்பாட்டிற்கு அதன் நிர்வாக்ம் முறைப்படி சங்கத்தை அனுகினால் நிர்வாக குழு கூடி பரிசீலித்து தேவை மற்று அவசியத்தின் அடிப்படையில் நிதி நிலையைப் பொறுத்து உதவுவது.
அபிராமம் நத்தம் ஊர் மக்களின் ஆரோக்கியம் , உடல் நிலை பராமரித்தல் இவைகளுக்கு எதிர் காலத்தில் ஒரு அவசர முதலுதவி சுகாதார நிலையமோ அல்லது மருத்துவமனையோ நிர்வாக குழு கூடி பரிசீலித்து நிதி நிலையைப்பொறுத்து கட்டுவது / கட்ட உதவுவது.
Welcome Speech by Mr K.P Shahul Hameed
|
![]() |
16.11.2014 அன்று அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி பழைய மாணவர்கள் சங்கம் தொடக்க விழா வரவேற்புரையில்
ஜனாப் ஹாஜி கே.பி. ஷாகுல் ஹமீது B.Sc., M.A., B.L
அவர்கள் நமது பள்ளியைப் பற்றி சொன்ன சில தித்திக்கும் தேன் துளிகள் :-
நாம் படித்த பள்ளி…
நாம் நடந்து வந்த நந்தவனம் !
ஓடித்திரிந்த வானவில் நிறைந்த
பால் வெளி !!
நம் எதிர்காலக் கனவைத்
துளிர்க்கச் செய்த
காலை வெயில் !
நேர்மையையும் நாணயத்தையும்
பதியன் போட்ட
உழவுக் கூடம் !
பல துரோணாச்சாரிகளைக் கொண்டு
உலா வந்த
உழவுப் பட்டறை
கோடையில் மழை
மழையில் குடை
கொல்லையில் கொத்துப் பூ
ஆற்றங்கரை மரம்.
அரசமர நிழல்.
ஆயிரம் இளமைக்
கனவுகளை நம் இதயத்தில் விதைத்து
நெஞ்சைத் தடவிச் சென்ற
வசந்த காலத் தென்றல் !!
இன்னும் சொல்ல எத்தனையோ !!!
சொல்லுங்கள் நண்பர்களே……….
New Release 20.11.2014
|
![]() |
மணிச்சுடர் பத்திரிக்கை செய்தியில் :
அபிராமம் நத்தம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்க ஆரம்ப விழா மற்றும் அபிராமம் உலக சாதனைச் சிறுவன் அக்ரம் பற்றிய செய்தித் தொகுப்பு:
http://www.muslimleaguetn.com/mc_201114.asp
விபரம் மேலே கொடுக்கப்பட்டுள்ள சொடுக்கியின் இரண்டாம் பக்கம் பார்க்க